ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-28 18:45 GMT


ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையிலான போலீசார் கெடிலம் கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும், திரும்பிச் செல்ல முயன்றார். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தை சேர்ந்த கூத்தன் மகன் ரகுராமன் (வயது 40) என்பதும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரகுராமனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்