மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
மானாமதுரையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மானாமதுரை,
மானாமதுரை பட்டறை தெருவை சேர்ந்தவர் சிவராஜ். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நேற்று காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியதாக விக்னேஸ்வரன்(வயது22) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.