தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
தூத்துக்குடியில் நர்ஸ் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.;
தூத்துக்குடி சுப்பாநாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஜெபஸ்டின். இவருடைய மனைவி செல்வராணி (வயது 35). இவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்தார். அதனை யாரோ மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.