கோவில்பட்டியில்மோட்டார் சைக்கிள் திருட்டு
கோவில்பட்டியில்மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி புது கிராமம் 2-வது தெருவை சேர்ந்த சுப்பையா பிள்ளை மகன் ஆறுமுக செல்வம் (வயது 56). இவர் கோவில்பட்டியிலுள்ள ஒரு மில்லில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் அதை திருடி சென்று விட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.