மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-20 19:20 GMT

நெல்லையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. 4-வது தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் இஸ்மாயில் (வயது 30) இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் தொழுகை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் டவுன் மேட்டு தெருவில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றார். வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பள்ளிவாசலுக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்