மோட்டார் சைக்கிள் திருட்டு

சிவகாசியில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

Update: 2023-04-05 19:40 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்குப்பகுதியில் உள்ள நாரணாபுரம் ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முத்தீஸ்வரன் (வயது 21). பட்டாசு ஆலையில் பணியாற்றி வரும் இவர் தனது வீட்டின் அருகில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் வேலைக்கு செல்ல தயாரான போது சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்தீஸ்வரன் பல இடங்களில் மோட்டார் சைக்கிளை தேடினார். ஆனால் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்