மோட்டார் சைக்கிள் திருட்டு

மானூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-30 19:13 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள ராமையன்பட்டி - சிவாஜிநகரைச் சேர்ந்தவர் வெயிலுமுத்து (வயது 35). தச்சு தொழிலாளியான இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மானூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்