மோட்டார் சைக்கிள் திருட்டு
காரியாபட்டி அருகே மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 27). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்த போது ேமாட்டார்சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.