சிவகாசி,
சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள இந்திராநகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 25). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தனது சித்தி வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது அது மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ்வரன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மோட்டார் சைக்கிள்கள் மாயமாகி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிள் திருடர்களை மடக்கி பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.