மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.;

Update: 2023-03-27 19:23 GMT

நெல்லை அருகே வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளை பெருமாள்புரம் மகிழ்ச்சி நகரில் உள்ள உறவினர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாா். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்