மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.

Update: 2023-03-10 19:31 GMT

நெல்லை அருகே தெற்கு அரியகுளம் முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் உமாநாதன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளை அங்குள்ள காய்கறி மார்க்கெட் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றதாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்