மோட்டார் சைக்கிள் திருட்டு

தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2023-02-18 18:39 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 32). இவர் உடையார்பாளையம் பைபாஸ் சாலையில் உள்ள மர அரவையில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளை மர அரவை ஆலை அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். மாலை 6 மணியளவில் வந்து பார்த்து போது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்