மோட்டார் சைக்கிள் திருட்டு
முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்புகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 42). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை சாமக்குளம் பெட்டிக்கடை முன்பு நிறுத்திவிட்டு வெளியே சென்றார்.பின்பு அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. மேலும் இதுகுறித்து கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் கீழத்தூவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.