கரூர் அருகே உள்ள நாவல்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.