மோட்டார் சைக்கிள் திருட்டு

முத்தையாபுரத்தில்மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.

Update: 2023-01-08 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள எம்.தங்கமாள்புரத்தை சேர்ந்த வடிவேல் மகன் ராம்குமார் (வயது37). டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் முத்தையாபுரம் பஜார் பகுதி அருகே, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மாத்திரை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பிவந்தபோது, மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்