சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள குச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குள்ளு மகன் செல்வராஜ்(வயது 38). சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.