மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்துள்ளது.

Update: 2022-06-05 18:24 GMT

நொய்யல்,

புகழூர் முருகம்பாளையம் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 54). இவர் நேற்று காலை 9 மணிக்கு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்று உணவு சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியம் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்