மோட்டார் சைக்கிள் திருட்டு

தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2022-06-04 15:02 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 22) கூலித்தொழிலாளி. கடந்த 2-ந்தேதி இவர், மோட்டார் சைக்கிளை ஜி. கல்லுப்பட்டியில் உள்ள தனது நண்பர் கவி பிரகாஷ் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து முத்துக்குமார் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்