ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தண்டலை கிராமம் வெட்டித்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 27). இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.