மோட்டார் சைக்கிள் திருட்டு

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.;

Update: 2023-10-03 19:00 GMT

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் எஸ்.கைலாசபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 27). இவர் தூத்துக்குடி யோகீசுவரர் காலனியில் உள்ள தனது சகோதரி வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாா். இதனை யாரோ மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்