மோட்டார் சைக்கிள் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் ராஜதுரை (வயது 23). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, தூங்க சென்றார். பின்னர், மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, மோட்டாா் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.