மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2023-08-29 19:34 GMT

திருமயம் அருகே சிவபுரம் கம்மஞ்செட்டி சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜவகர் பிரசாத் (வயது 43). இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் காலை எழுந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜவகர் பிரசாத் நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்