மோட்டார் சைக்கிள் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2023-08-16 18:28 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த அன்சகரம் பகுதியை சேர்ந்த ராஜா மகன் லோகநாதன் (வயது 32). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி சுகன்யா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். லோகநாதன் புதுப்பேட்டை கிராமத்தில் தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய அவர் தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டின் கீழ் தளத்தில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர்.

நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் திருட்டு போனதை அறிந்த லோகநாதன் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்