மோட்டார் சைக்கிள் திருட்டு

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-08-08 21:24 GMT

பாளையங்கோட்டை:

நெல்லை அருகே சிவந்திபட்டி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 53). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நிறுத்தி இருந்தாராம். திரும்பி வந்து பார்த்த போது மோட்டாா் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து முருகன் சிவந்திபட்டி போலீஸ் நிலைத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்