மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2023-07-15 17:59 GMT

திருவரங்குளம் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் கனகராஜ் மகன் ராமச்சந்திரன் (வயது 26). இவர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு வெளியே வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் அருகில் உள்ள இ்டங்களில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆலங்குடி ேபாலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்