மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-06 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு வளாகம் மாடியில் வசித்து வருபவர் ஜெய்சங்கர்(வயது49). இவர், கடந்த செப்.17-ந் தேதி மோட்டார் சைக்கிளை வீட்டு வளாகத்தின் முன்பு நிறுத்தியிருந்தார். அதை மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அந்த மோட்டார் சைக்கிளை காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவிலை தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் பூஜை மணி (23) திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது ெசய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்