தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவருக்கு வலைவீச்சு

தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2023-07-20 18:45 GMT

தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்தவர் மரிய வர்கில் ராபின் (வயது 32). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். இதனை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த இதால்பாட் என்பவர் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்