வெள்ளிச்சந்தையில் மாணவர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி சாகசம்
வெள்ளிச்சந்தையில் மாணவர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி சாகசம் செய்யப்பட்டது.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை சரலில் செயல்படும் ஒரு கராத்தே பள்ளியில் மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட மூத்த கராத்தே மாஸ்டர் வேலப்பன் சென்சாய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கராத்தே பட்டைகள் வழங்கினார். இதில் 25 மாணவர்களுக்கு கலர் பட்டையும், 25 மாணவர்களுக்கு கருப்பு பட்டையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்ச்சியாக தக்கலை அருகே ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ரிஷேக் (15) தன் உடல் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி ஓட்ட செய்து சாகசம் செய்தார். இதுபோல் ஆரல்வாய்மொழி கணேசபுரம் 8-ம் வகுப்பு மாணவர் ராகுல் சாமிநாதன் (13) வயிற்றில் 45 கிலோ கிரானைட் கல்லை வைத்து 6½ கிலோ எடை கொண்ட சுத்தியலால் அடித்து உடைக்க செய்து சாகசம் நடத்தினார். மாணவர்களின் இந்த சாகசத்தை பொதுமக்கள் பலர் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சகாயராஜன் செய்திருந்தார்.