பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி

பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2022-08-15 18:19 GMT

இந்திய சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மாவட்டம் முழுவதும் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிளில் தேசியக்கொடி ஏந்தி பேரணியாக சென்று வைர விழா கொண்டாட்டங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியில் கட்சியின் கிழக்கு ஒன்றிய தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அய்யப்பன், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தா.பழூர் ஒன்றிய எல்லையான சிலால் கிராமத்தில் இருந்து தொடங்கிய இந்த மோட்டார் சைக்கிள் பேரணி அத்தனேரி, அணைக்குடம், கோடங்குடி, சிந்தாமணி, தா.பழூர், காரைக்குறிச்சி, வழியாக மதனத்தூர் வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் ஞானசேகரன், பிரசார பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் புஷ்பராஜன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சக்திவேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட திரளான பா.ஜ.க.வினா் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்