பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி

பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.

Update: 2023-04-12 19:35 GMT

அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் வடக்கு தெருவை சேர்ந்த நடராஜன் மகன் மணிவண்ணன் (வயது 37). இவரது நண்பர் பெரியநாகலூர் தெற்கு கொட்டாக்காடு செல்வமணி மகன் சக்திவேல் (36). இவர்கள் இருவரும் நேற்று பெரியநாகலூரில் இருந்து கல்லங்குறிச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். சக்திவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். அப்போது கோப்பிலியன்குடிகாடு கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காயமடைந்த சக்திவேலை அப்பகுதி மக்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்