தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் தடுப்பு சுவரில் மோட்டார் ைசக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.

Update: 2023-05-23 19:33 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் தடுப்பு சுவரில் மோட்டார் ைசக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் கனகராஜ் (வயது 27). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பிணயாற்றி வந்தார்.

இவர் தனது பணியின் நிமித்தமாக நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வள்ளியூர் நான்குவழிச்சாலையில் வரும் போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

நெல்லை அருகே மேலசெவல் பேரூராட்சி கொழுமடை பகுதியை சேர்ந்தவர் தளவாய் (60). விவசாயியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்