மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; முதியவர் பலி

வேலூர் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதலில் முதியவர் பலியானார்.

Update: 2023-07-19 18:11 GMT

வேலூரை அடுத்த ஆற்காட்டன்குடிசை பகுதியை சேர்ந்தவர் காசி (வயது 70). இவர் நேற்று காலை 10 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த காந்தி என்பவருடன் மொபட்டில் இடையன்சாத்து ஜங்ஷன் பகுதிக்கு வந்தார். வேலூர்-ஆரணி சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காசி பலத்த காயமடைந்தார். காந்தி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சித்தேரியை சேர்ந்த நவீன்குமார் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காசியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காந்தி, நவீன்குமாருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்