மோட்டார் சைக்கிள்- நகை திருட்டு
தேவதானப்பட்டியில் மோட்டார் சைக்கிள், நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி வைகை அணை சாலை பகுதியை சேர்ந்தவர் விஜி மோன் (வயது 35). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலையில் அவர் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. உடனே சந்தேகம் அடைந்து வீட்டின் மேல்மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் பீரோவில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் மேஜை மீது இருந்த செல்போன் திருடு ேபாயிருந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் விஜிமோன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள், நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.