மோட்டார்சைக்கிள் தீயில் எரிந்து சேதம்
மோட்டார்சைக்கிள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
ராமநாதபுரம் சேதுபதி நகரை சேர்ந்தவர் முகமது பகது (வயது 26). இவர் தனது மோட்டார்சைக்கிளை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் திடீரென அவருடைய மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு எழுந்து வந்த முகமது பகது உடனே தீயை அணைத்தார். மேலும் இதுகுறித்து அவர், கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.