தேவகோட்டை அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்

தேவகோட்டை அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

Update: 2023-09-17 19:30 GMT

தேவகோட்டை

புதுச்சேரி வம்பட்டு பகுதியை சேர்ந்த பாவாடி மகன் ஹரிஹரன் (வயது 26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பழனி மகன் பரணி (19) என்பவரும் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து தேவகோட்டை வழியாக ராமேசுவரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சென்ற போது, நிலை தடுமாறி ேமாட்டார்சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பலியானார். பரணி படுகாயத்துடன் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்