மோட்டார் சைக்கிள் மோதி கேபிள் ஆபரேட்டர் சாவு

இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கேபிள் ஆபரேட்டர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-01-17 18:45 GMT

திங்கள்சந்தை:

இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கேபிள் ஆபரேட்டர் பரிதாபமாக இறந்தார்.

கேபிள் ஆபரேட்டர்

இரணியல் அருகே உள்ள காஞ்சிரவிளையை சேர்ந்தவர் ஜோணி (வயது48), கேபிள் ஆபரேட்டர். இவர் சம்பவத்தன்று இரணியல் சந்திப்பில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது பண்ணிக்கோடு ரேஷன் கடை அருகே சிக்னல் போட்டு திரும்பினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், ஜோணியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜோணி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

ஆபத்தான நிலையில் இ்ருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோணி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து மோதிய மோட்டார் சைக்கிள் எது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்