மோட்டார்சைக்கிள் மோதி விபத்து:விவசாயி உள்பட 2 பேர் பலி

போடி அருேக மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2023-06-04 18:45 GMT

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 80). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர், அந்த பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார்.

மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த போடி அருகே உள்ள விசுவாசபுரத்தைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான கணேசன் (35) என்பவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் மதியம் கணேசனும் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்