கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு

கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி இறந்தார்.

Update: 2022-06-14 20:50 GMT

கொல்லங்கோடு, 

கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி இறந்தார்.

தொழிலாளி சாவு

கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 53). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கொல்லங்கோட்டில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதன் பின்னால் ஜோபின் என்பவர் இருந்தார். இந்தநிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் புஷ்பராஜ் படுகாயமடைந்தார். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த ஜோபினும் கீழே விழுந்து காயமடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பாறசாலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புஷ்பராஜின் மனைவி மினி கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்