டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
செஞ்சி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானாா்.
செஞ்சி:
செஞ்சியை அடுத்த மேல்சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் நாகராஜ்(வயது 32). இவர், தனது மோட்டார் சைக்கிளில் மொடையூர் ஆற்றுப்பாலத்தில் சென்றபோது, அங்கு நின்று நின்று கொண்டிருந்த டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.