செஞ்சியில்டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபா் சாவு

செஞ்சியில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபா் உயிரிழந்தாா்.

Update: 2023-05-07 18:45 GMT


செஞ்சி, 

செஞ்சி அருகே வடவானூரை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் வடிவேலு (வயது 35). நேற்று முன்தினம் இரவு இவரும், அதே ஊரை சேர்ந்த அர்ச்சுனன் மகன் ராமச்சந்திரன் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, செஞ்சியில் திண்டிவனம் சாலையில் உள்ள கோா்ட்டு வளாகம் அருகே வந்த போது, முன்னால் சென்ற டிராக்டர் டிப்பர் மீது எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் செஞ்சி அரசு ஆஸ்பத்திாியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வடிவேலு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வடிவேலு பரிதாபமாக இறந்தார். ராமசந்திரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்