ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி

ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2022-06-08 21:06 GMT

சமயபுரம்:

கல்லூரி மாணவர் சாவு

புள்ளம்பாடியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் வினோத்(வயது 21). இவர் சிறுகனூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்தவுடன், அதே கல்லூரியில் படிக்கும் பெரம்பலூரை சேர்ந்த ஹசினாபானு(21) என்ற மாணவியை, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கல்லூரியில் இருந்து புள்ளம்பாடி நோக்கி சென்றார்.

அப்போது லால்குடியில் இருந்து சிறுகனூர் நோக்கி வந்த நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வினோத் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஹசீனாபானு பலத்த காயமடைந்தார்.

போலீசார் விசாரணை

இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் ஹசீனாபானுவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்