பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 போ் உயிர் தப்பினர்

பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 போ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-07-02 15:40 GMT

கடையநல்லூர்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்தது. கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் வளைவில் திரும்பியபோது எதிரே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், பஸ்சின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 நபர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த பரபரப்பு காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்