மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் தம்பதி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-03 18:47 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விஜயபுரத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 46). இவரது மனைவி முத்துலட்சுமி(41). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதேபோல் தொண்டமாந்துறையை சேர்ந்த மனோஜ்(23), அவரது நண்பர் வேல்முருகன்(21) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கிருஷ்ணாபுரம் ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மனோஜின் மோட்டார் சைக்கிளும், ரத்தினசாமியின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்