டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

நாட்டறம்பள்ளி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-08-23 18:42 GMT

வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பவுலேஷ். இவரது மகன் கனகராஜ் (வயது 16). பெங்களூரு பகுதியில் தச்சு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவரது சொந்த ஊரில் திருவிழா நடைபெறுவதால் தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து வாணியம்பாடிக்கு வந்துள்ளார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த பங்களா மேடு அருகே தேசிய நெடுஞ்சாலை பூபதி கவுண்டர் தெரு சர்வீஸ் சாலையில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென பின்னோக்கி வந்ததால் மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியது. இதில் கனகராஜ் படுகாயமடைந்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்