லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

ஆம்பூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-11-20 16:33 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஒரு லாரி ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆலங்குப்பம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், லாரி மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிரு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்