பூந்தமல்லி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - இருவர் பலி

பூந்தமல்லி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்-மாணவி என இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-06-26 02:12 GMT

பூந்தமல்லி,

ஐதராபாத்தை சேர்ந்த மாணவி மஞ்சாளா சுருதி (வயது 18). அதேபோல் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் அக்சதா குமார் (18). இவர்கள் இருவரும் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

நேற்று மாலை இவர்கள் இருவரும் நண்பரிடம் மோட்டார்சைக்கிளை வாங்கி கொண்டு வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் வேகமாக மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அக்சதா குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மஞ்சாளா சுருதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்