மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு

தண்டராம்பட்டு அருகே மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2023-08-13 17:39 IST

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாலிபர் பலி

தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 32). இவர் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு மரப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை மோட்டார்சைக்கிளில் வீட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

இதேபோல், செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சம்பத் (52) என்பவர் தனது மாட்டு வண்டியில் உப்பு வியாபாரம் செய்ய கீழ்சிறுபாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த கார்த்திகேயனுக்கு சரளா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து உடலை வாங்க வந்த உறவினர்கள் மாலையில் கீழ்சிறுபாக்கம் பஸ் நிறுத்தம் அருகே பிணத்தை நடுரோட்டில் வைத்து உப்பு வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்