தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

திண்டிவனத்தில் தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Update: 2023-06-25 18:45 GMT

திண்டிவனம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வேளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ்(வயது 32). இவர் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபார்த்து வந்தார். இவரும், ஆரியாத்தூர் கிராமத்தை சேர்ந்த கோகுல்(24) என்பவரும் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ், கோகுல் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கோகுல் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்