வேப்பூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

வேப்பூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிாிழந்தாா்.

Update: 2023-08-11 18:45 GMT

வேப்பூர், 

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் எஸ்.பி. கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் ஆதிரத்தினம் மகன் சுந்தரவடிவேல் (வயது 38). சென்னையில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நேற்று காலை 8 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, முன்னாள் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது சுந்தரவடிவேல் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான சுந்தரவடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வதை்தனர். மேலும் விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்