மோட்டார் சைக்கிள்- சரக்கு வேன் மோதல்; விவசாயி பலி

காரையூர் அருகே மோட்டார் சைக்கிள், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விவசாயி பலியானார்.

Update: 2022-11-09 19:03 GMT

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே உள்ள சின்னக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 50). விவசாயி. இவரது நண்பர் பொன்னுச்சாமி. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அருகே உள்ள மேலப்பழுவஞ்சியிலிருந்து சின்னக்கவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். வெள்ளாளபட்டி செட்டி ஊரணி அருகே வந்த போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த வெள்ளைச்சாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொடும்பாளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்